Monday, December 29, 2025

பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் திண்டுக்கல்லில் கைது

பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் திண்டுக்கல்லில் போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரையில் பிரபல ரவுடியாக இருந்து, தற்போது நடமாடும் நகைக்கடைபோல வலம் வரும் வரிச்சியூர் செல்வம் சமீபத்தில் கூட கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில், திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் பல குற்ற சம்பவ வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ரவுடி வரிச்சியூர் செல்வத்தை திண்டுக்கல் நகர் வடக்கு காவல் ஆய்வாளர் வெங்கடாசலம் தலைமையில் கொண்ட காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

Related News

Latest News