டி20 கிரிக்கெட் வரலாற்றில் 12 ஆயிரம் ரன்களை கடந்த 2வது இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்
ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மல்லுக்கட்டின. இதில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 70 ரன்கள் அடித்தார்.
இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 12 ஆயிரம் ரன்களை கடந்த 2வது இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில் 13 ஆயிரத்து 208 ரன்களுடன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.