Wednesday, February 18, 2026

ரோபோ சங்கர் மனைவி நடனம்; வெளுத்து வாங்கிய பாடகி சின்மயி!!

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான பாடகிகளில் ஒருவரான சின்மயி கன்னத்தில் முத்தம்மிட்டாள் திரைப்படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே… பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானார். இவரது முதல் பாடலே சூப்பர் ஹிட்டானது. இவர் பாடகி மட்டுமின்றி சிறந்த டப்பிங் கலைஞர்களில் ஒருவரும் ஆவார்.

வைரமுத்துவால் தனக்கு ஏற்பட்ட பிரச்சனையை MeToo மூலம் சின்மயி முன்வைத்தார். இதனால் இவருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. இந்த பிரச்சினையின் பின்னர் தமிழில் டப்பிங் பேசாமல் இருந்து வந்த சின்மயியை, தடைகளை மீறி லியோ படத்தில் திரிஷாவிற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் டப்பிங் பேச வைத்தார்.

அண்மையில் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ‘முத்த மழை’ பாடலை சின்மயி பாடியிருந்தார்.அது சமூக ஊடகங்களில் பெரும் வைரலாகியது.

இந்த குரலையா தடை செய்து வைத்திரு்ககின்றார்கள் என இணைத்ததில் ரசிகர்கள் பலரும் தங்களின் ஆதங்கத்தை தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று வெளியான பைசன் காலமாடன் படத்தின் மூன்றாவது பாடலை சின்மயி பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் நடிகர் ரோபோ சங்கர் காலமானார். அவரது மனைவி பிரியங்கா, ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தில் நடனமாடியது குறித்து சமூக ஊடகங்களில் பெரும் பேசுபொருளானது.

இது குறித்து பாடகி சின்மயி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா குறித்து வரும் விமர்சனங்களுக்கு சின்மயி காட்டமாக பேசி தற்போது வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

Related News

Latest News