தீபாவளியை முன்னிட்டு பட்டாசு விற்பனை சூடுபிடித்து வரும் நிலையில், ராமநாதபுரத்தில் ரோபோ மூலம் பட்டாசு விற்பனை செய்யப்படுவதால் சிறுவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் பட்டினம்காத்தான் இசிஆர் சாலையில் உள்ள பட்டாசு கடையில், ரோபோ பட்டாசு விற்பனை செய்து வருகிறது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை வரவேற்று, அவர்கள் தேர்வு செய்யும் பட்டாசுகளை ரோபோ கையில் ஏந்தி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
