Wednesday, February 18, 2026

நடிகர் ரோபோ சங்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது

நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் காலமானார். ரோபோ சங்கரின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ரோபோ சங்கரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன் என பலரும் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர், பிற்பகல் 3.20 மணியளவில் சென்னை வளசரவாக்கம் இல்லத்தில் இருந்து நடிகர் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.பின்னர்,ரோபோ சங்கரின் உடலுக்கு வளசரவாக்கம் மின்மயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரோபோ சங்கரின் உடல் வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Related News

Latest News