சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் வெள்ளித்திரையில் அறிமுகமாகி பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ரோபோசங்கர் நேற்று மதியம் ஒரு படப்பிடிப்பில் பங்கேற்றபோது, திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டது.இதனையடுத்து, அவரை மீட்டு படக்குழுவினர் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ரோபோ சங்கரை பரிசோதித்த மருத்துவர்கள் நீர்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் சில தினங்கள் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறித்தியதாகவும் மேலும்,ரோபோ சங்கர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவித்தனர் .
இது தொடர்பாக ரோபோசங்கர் மனைவி பேசியதில், ‘தொடர் படப்பிடிப்பு காரணமாக குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் 2 நாட்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற டாக்டர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர் என்று தெவித்தார்,
சில வருடங்களுக்கு முன்பு ரோபோ சங்கர் சிமஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறி மீண்டும் படங்களில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் ரோபோ சங்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
