Tuesday, December 30, 2025

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தரமற்ற முறையில் சாலை : பொதுமக்கள் அதிருப்தி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் போடப்பட்ட தார் சாலை, தரமற்ற முறையில் போடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டினர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லட்சுமியாபுரம் விலக்கிலிருந்து துலுக்கன்குளம் செல்லும் வரையில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார் சாலை அமைக்கும் பணி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில், தார்சாலைகள் மிகவும் தரம்மற்ற முறையில் போடப்பட்டுள்ளதாக அப்பகுதிமக்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் புதிதாக போடப்பட்ட தார் சாலையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related News

Latest News