அதிகரிக்கும் கள்ளத்தொடர்புகள்., ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் டேட்டிங் செயலிகள் (Dating Apps) பயன்பாடு அதிகரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திருமண பிணைப்பை மீறிய உறவுகள் அதிகரித்திருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

ஆய்வில் சுமார் 40 லட்சம் பேர் டேட்டிங் செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இதில் 65 சதவீதம் ஆண்களும், 35 சதவீதம் பெண்களும் உள்ளனர். பெரும்பாலான பயனர்கள் திருமணமானவர்களே. குறிப்பாக, கடந்த 2 ஆண்டுகளில் பெண்களின் பங்களிப்பு 148 சதவீதம் அதிகரித்துள்ளது.

சராசரியாக, பயனர்கள் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரையிலும் செயலியில் அரட்டையில் ஈடுபடுகின்றனர். இதன் உச்ச நேரங்கள் மதியம் 12 மணி முதல் 3 மணி வரையிலும், இரவு 10 மணி முதல் நள்ளிரவு வரையிலும் இருக்கும்.

ஆண்கள் பெரும்பாலும் 25 முதல் 30 வயது பெண்களை விரும்புவதாகவும், பெண்கள் 30 முதல் 40 வயது ஆண்களை விரும்புவதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பெண்கள் பொருளாதார ரீதியாக உயர்ந்த நிலை கொண்ட டாக்டர்கள், ஆடிட்டர்கள் போன்றவர்களை அதிகம் விரும்புகிறார்கள்.

பயனர்களின் பிரிவில் பெங்களூரு 18 சதவீதத்துடன் முதலிடத்தில், ஐதராபாத் 17 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளன. டெல்லியில் 11 சதவீதம், மும்பையில் 9 சதவீதம் பயனர்கள் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு ஜூன் மாத தரவின்படி, தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் திருமணம் மீறிய உறவுகள் அதிகமாக இருந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News

Latest News