கர்நாடகாவில், நிதி பிரச்சனைகளால் உயர்கல்வி பயில முடியாமல் இருந்த மாணவி ஜோதிகாவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
கர்நாடகாவின் பகல்கோட் மாவட்டத்தில் வசிக்கும் ஜோதிகா, கணினிகளில் பயன்பாடுகளுக்கான இளங்கலை பட்டம் (BCA) படிப்பில் சேர விரும்பினார். ஆனால் நிதிச்சுமை காரணமாக உயர்கல்விக்கு செல்ல முடியமால் தவித்து வந்துள்ளார்.
இந்த செய்தி ரிஷப் பண்ட்டின் கவனத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து மாணவி ஜோதிகா உயர் கல்வியில் சேர ரூ.40 ஆயிரம் பணத்தை ரிஷப் பண்ட் அனுப்பியுள்ளார் . தொடர்ந்து மாணவி ஜோதிகாவும், கல்லூரி நிர்வாகமும் ரிஷப் பண்டிற்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர். ரிஷப் பண்ட் செய்த இந்த உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.