Wednesday, April 30, 2025

பளாரென ‘கன்னத்தில்’ விழுந்த அறை ‘அவமானத்தில்’ துடித்துப்போன ரிங்கு

ஏப்ரல் 29ம் தேதி டெல்லியின் அருண் ஜெட்லி மைதானத்தில், டெல்லி கேபிடல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த KKR 20 ஓவர்கள் முடிவில் 204 ரன்களை குவித்தது. பின்னர் சேஸிங் செய்த DCயால் 190 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால் 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றிவாகை சூடியது. போட்டிக்கு பிறகு டெல்லி வீரர் குல்தீப் யாதவ், கொல்கத்தா வீரர் ரிங்கு சிங்குடன் உரையாடினார். அப்போது யாரும் எதிர்பாராவிதமாக, ரிங்குவின் கன்னத்தில் பட்பட்டென குல்தீப் இரண்டு முறை அறைந்தார்.

இருவரும் என்ன பேசினார்கள்? எதற்காக ரிங்குவை குல்தீப் அடித்தார்?, என்பது தெரியவில்லை. ஆனால் ரிங்கு இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவரது முகம் அவமானத்தால் சிவந்து போய் விட்டது. இதைப்பார்த்த ரசிகர்கள், ”மொதல்ல இந்த குல்தீப்ப நெக்ஸ்ட் மேட்ச்ல தடை பண்ணுங்க.

மனுஷனுக்கு திமிரு அதிகம்,” என்று கண்டபடி திட்டித் தீர்த்து வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Latest news