தூங்குபவர்களுக்கு சன்மானம்

179
Advertisement

தூங்குபவர்களுக்கு சன்மானம் தருவதாக அறிவிக்கப்பட்டுள்ள
தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

மனித வாழ்க்கையில் உறக்கம் இன்றியமையாதது. ஒருவரை
ரீசார்ஜ் செய்து புத்துயிர் பெற தூக்கம் வழிவகுக்கிறது. அதனால்
தூக்கம் பற்றி அறிந்துகொள்ள விரும்பிய மலேசியத் தலைநகர்
கோலாலம்பூரிலுள்ள மலாயா பல்கலைக் கழகம் சன்மானம்
தருவதாக அறிவித்துள்ளது.

இந்த ஆய்வில் 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம்
என்று அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஆய்வுக்குள் செல்வதற்குமுன்பு அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்
படுவார்கள். அதில் தேர்வாகும் நபர்களே உறங்கும் திட்டத்தில் கலந்து
கொள்ள முடியும்.

தகுதிபெற்றவர்கள், இந்த ஆய்வுக்காக அமைக்கப்பட்டுள்ள உறங்கும்
வீட்டுக்குள் செல்லவேண்டும். தொடர்ந்து 30 நாட்கள் இரவில் தூங்க
வேண்டும். வெற்றிகரமாக இந்த 30 இரவுகளிலும் தூங்கியவர்களுக்கு
1,500 மலேசிய ரிங்கிட் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

இது இந்திய மதிப்பில் தோராயமாக 27 ஆயிரம் ரூபாய்க்கு சமம் ஆகும்.

இந்த ஆய்வுதொடர்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அந்தப் போஸ்டர்கள்
உடனே வைரலானது. அதைத் தொடர்ந்து, இந்த ஆய்வில் பங்கேற்க ஏராளமானோர்
வந்துவிட்டனர், இதனால், இந்த ஆய்வில் கலந்துகொள்வதற்கான பதிவு நிறுத்தப்பட்டது.

மலேசியப் பல்கலைக் கழகத்தின் இந்த வித்தியாசமான ஆய்வு சமூக வலைத்
தளங்களில் தற்போது வைரலாகிவருகிறது.