கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ரெட்ரோ’. பூஜா ஹெக்டே, நாசர், ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படம் விமர்சன ரீதியாக பெரிதாக எடுபடவில்லை.
’ரெட்ரோ’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.234 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் ‘ரெட்ரோ’ படத்தின் OTT ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வரும் ஜூன் 5-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. படத்தை தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் காண முடியும்.