Sunday, August 17, 2025
HTML tutorial

‘பதிலடி மிக கடுமையாக இருக்கும்’ – பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப் படை தளத்திற்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, வீரர்கள் முன்பு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, ”ஆபரேஷன் சிந்தூர் மூலம், இந்தியாவின் சுயமரியாதை உலக அளவில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மிகச்சிறந்த உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளது. எஸ் 400 நமக்கு மிகப்பெரிய வலிமையைக் கொடுத்துள்ளது. நமது அதிநவீன தொழில்நுட்ப ஆயுதங்களின் முன்பு பாகிஸ்தானால் போட்டியிட முடியவில்லை.

பாகிஸ்தான் மீண்டும் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாடு எடுத்தால், அதற்கான பதிலடி மிகவும் கடுமையானதாக இருக்கும். நாம் கொடுக்கும் பதிலடி அவர்களுக்கு என்றென்றும் நினைவில் இருக்கும். ஆபரேஷன் சிந்தூரில், ஆயுதங்களை வீரர்கள் மிகச்சிறப்பாக கையாண்டனர். முப்படைகளும் மிகச்சிறப்பாக பணியாற்றியுள்ளீர்கள்.

பாகிஸ்தானுக்கு நமது படைகளின் வலிமை என்னவென்று காட்டப்பட்டுள்ளது. இந்தியர்களையும் இந்திய எல்லையையும் தொட நினைப்பவர்களுக்கு ஒரே முடிவுதான், அது அழிவு மட்டும்தான். இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், எங்கள் வழியில் நாங்கள் பதிலடி கொடுப்போம்” என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News