பாவம், இந்த பூனைகளுக்கு தான் எவ்ளோ கசப்பான வாழ்க்கை!

281
Advertisement

வீடுகளில் செல்லப்பிராணிகளாக வலம் வரும் பூனைகளுக்கு கூர்மையான கேட்கும் மற்றும் இருட்டிலும் பார்க்கும் திறன் உள்ளது அனைவரும் அறிந்ததே.

ஆனால், 470 சுவை மொட்டுகள் மட்டுமே உடைய நாக்கை வைத்து அவைகளால் சுவையை உணர்வது மிகவும் கடினம்.

அதிலும், கசப்பான சுவைகளை எளிதில் அடையாளம் காணும் பூனைகளால் இனிப்பு சுவையை உணர முடிவதில்லை என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பூனையின் உடலுக்கு கார்போஹைட்ரேட்கள் தேவைப்படாத காரணத்தாலோ என்னவோ அவைகளுக்கு அது தொடர்பான இனிப்பு சுவையையும் உணர முடிவதில்லை.

எனினும், கசப்பு தன்மையை கண்டறியும் பூனையின் திறன் அவற்றை பல நச்சுக்களிடம் இருந்து இயல்பாகவே பாதுகாக்கின்றது.

சில நேரங்களில் ஐஸ் கிரீம், சாக்லேட் போன்ற பொருட்களை பூனைகள் சாப்பிட்டாலும், பூனை அதை இனிப்பு சுவைக்காக இல்லாமல், அவற்றில் உள்ள கொழுப்பு சத்தினால் ஈர்க்கப்பட்டு தான் சாப்பிடுகின்றன என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நாய்களுக்கு 1700 சுவை மொட்டுகள் வரை உள்ள நிலையில், சராசரி மனிதனுக்கு 9000 சுவைமொட்டுகள் வரை இருப்பது குறிப்பிடத்தக்கது.