கடந்த சில நாள்களாக பிகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் இடமில்லாததால் அதிகளவிலான பயணிகள் முன்பதிவு பெட்டிகளில் பயணித்து வருகின்றனர். எனவே முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை நான்கிலிருந்து இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட புதிய ரயில்வே கொள்கையின் அடிப்படையில், ஒரு ரயிலுக்கு அதிகபட்சமாக இரண்டு முன்பதிவில்லா பெட்டிகள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற விதிமுறைபடி குறைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்ட செய்தி பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.