ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா சமீபத்தில் ரெப்போ விகிதம் 5 சதவீதத்தில் நிலையாக இருக்கும் என்பதை அறிவித்திருக்கிறார். இருந்தாலும் இந்த வருடம் மட்டுமே மொத்தமாக 100 பேசிஸ் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலமாக வீட்டுக் கடன் வாங்கி இருக்கும் நபர்களின் மாத EMI தொகை பெரிய அளவில் குறைந்தது. இருந்த போதிலும் வீட்டுக் கடன் வாங்கியுள்ளவர்கள் மேலும் கூட தங்களுடைய EMI தொகையைக் குறைப்பதற்கான வழிகளை தேடி வருகின்றனர். அதற்கான சில வழிமுறைகளை விளக்குகிறது இந்த பதிவு.
உங்களுடைய வீட்டுக் கடனுக்கான ப்ரீ-பேமெண்ட் என்பது அசல் தொகையைக் குறைக்கும். அதனால் எதிர்காலத்தில் உங்கள் வட்டி பேமெண்ட்களும் குறையும். உங்களால் முடிந்த அளவு பணத்தை ப்ரீ-பேமெண்ட்டாக செலுத்துவது EMI தொகையைக் குறைக்க வழி செய்யும்.
ஒருவேளை உங்களுடைய கடனை நீங்கள் அதிக வட்டி விகிதத்தோடு செலுத்த துவங்கி இருந்தால் கடன் வழங்கியவரிடம் பேசி உங்களுடைய வட்டி விகிதங்களைக் குறைக்க கோரிக்கை வைக்கலாம்.
அடுத்து உங்களுக்கு கிடைக்கும் போனஸ் அல்லது கூடுதல் வருமானம் போன்றவற்றின் மூலம் EMI பேமெண்ட்களை அதிகமாக்குவது கடனை விரைவாக செலுத்துவதற்கும் மொத்த வட்டி தொகையைக் குறைப்பதற்கும் உதவும்.
ஒருவேளை குறைவான வட்டி விகிதம் கொடுக்கும் வேறு ஒரு கடன் வழங்குனரை கண்டுபிடித்து விட்டால் தற்போது இருக்கக்கூடிய உங்களுடைய கடனை புதிய வங்கிக்கு பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் செய்தும் EMI-ஐ குறைக்கலாம்.
அடுத்ததாக ஃப்லோட்டிங் வட்டி விகிதங்களை நீங்கள் தேர்வு செய்யும் பட்சத்தில் ஒவ்வொரு முறை RBI ரெப்போ விகிதத்தைக் குறைக்கும்போதும் உங்களுடைய கடனுக்கான வட்டி விகிதமும் குறையும். இவ்வகையான வழிமுறைகளை பயன்படுத்தி உங்கள் EMI தொகையை குறைத்துக்கொள்ளலாம்.