கேரளாவில் 8 நாள்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழைத் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் தற்போது தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மே 25, 26 தேதிகளில் கோவை, நீலகிரி மலைப்பகுதிகளில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 27ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 16 ஆண்டுகளில், முன் கூட்டியே, தென்மேற்கு பருவமழை தொடங்குவது இதுவே முதல் முறையாகும்.