புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி 5 ஆயிரம் பேருக்கு அரசுப்பணி வழங்கியதை நிரூபித்தால் தான் அரசியலை விட்டு விலக தயார் என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரி ரேஷன்கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசி டெண்டரில் முறைகேடு, ஊழல் நடந்துள்ளது என்றும், தற்போது இலவச அரிசி டெண்டரை துணைநிலைஆளுநர் நிறுத்தி வைத்துள்தாக குற்றம்சாட்டினார்.
புதுச்சேரியில் ஆயிரத்து 400 பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கி உள்ளது என்றும், ஆனால் முதலமைச்சர் ரங்கசாமி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவருக்கு வேலை வழங்கியதாக கூறுகிறார் என்று தெரிவித்தார்.
முதலமைச்சர் ரங்கசாமி 5 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்கியதை நிரூபித்தால் தான் அரசியலை விட்டு விட்டு செல்கிறேன் என்றும் அவர் நிரூபிக்காவிடில் முதலமைச்சர் பதவி விட்டு விலக வேண்டும் என நாராயணசாமி வலியுறுத்தினார்.