Friday, April 25, 2025

‘அந்த’ விஷயத்துல RCB தான் எங்களோட குரு இதென்னடா CSKக்கு வந்த ‘சோதனை’

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, மீண்டுமொரு மோசமான ஆண்டாக இந்த 2025 அமைந்துள்ளது. சென்னையின் Play Off கனவை CSK பேட்ஸ்மேன்கள் குழி தோண்டி புதைத்தே விட்டனர். இதனால் கேப்டன் தோனி, பயிற்சியாளர் பிளெமிங் இருவரும் மிகுந்த மன வேதனையில் இருப்பதாக தெரிகிறது.

இந்தநிலையில் பிளெமிங் அளித்த பிரெஸ்மீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை அணி குறித்து அவர், ” மீதமிருக்கும் அத்தனை போட்டிகளையும் வென்று, Play Offக்கு தகுதி பெற முயற்சி செய்வோம். இதைக்கேட்டு சிலர் சிரிக்கலாம்.

ஆனால் கடந்தாண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதனை சாதித்துக் காட்டியது. 6 போட்டிகளையும் அசத்தலாக வென்று, பிற அணிகளுக்கு ஒரு முன்மாதிரியாக RCB மாறியுள்ளது. ஒருவேளை Play Offக்கு நாங்கள் தகுதி பெறாவிட்டால், எங்களின் பிளேயிங் லெவனை கட்டமைப்பதில் வெற்றி பெறுவோம்,” என்று பேசியிருக்கிறார்.

முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரியும், பெங்களூரு அணியை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு, அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெறுவோம் என்று, பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news