Sunday, August 10, 2025
HTML tutorial

நாட்டில் கள்ளநோட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக RBI தகவல்

நாட்டில் கள்ளநோட்டுகள் எண்ணிக்கை 37% கூடுதலாக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஆர்பிஐ வெளியிட்ட விவரங்களின்படி, கடந்த நிதியாண்டில் 1.18 லட்சம் எண்ணிக்கையிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 37.3%கூடுதல் என்றும் இதன் மதிப்பு ரூ.5.88 கோடி என்றும் தெரிவித்துள்ளது.

100 ரூபாய் கள்ள நோட்டுகள் 51,000 எண்ணிக்கையிலும் 200 ரூபாய் கள்ள நோட்டுகள் 32,660 எண்ணிக்கையிலும் வங்கிகள் கண்டறிந்துள்ளன.

கடந்த ஆண்டு 23,953 வங்கி மோசடிகள் நடைபெற்றுள்ளது. அதில் தனியார் வங்கிகளில் மட்டும் 14,233 மோசடிகள் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News