EMI குறையப் போகுது! ரிசர்வ் வங்கியின் அடுத்த அதிரடி! மக்களே ரெடியா இருங்க…!

ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பால் கடன் வாங்கியவர்களுக்கு நிம்மதி தரும் செய்தி வெளியாகியுள்ளது. வங்கிகளில் வீட்டு கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடன்கள் பெற்றுள்ளவர்கள் மாதந்தோறும் இஎம்ஐ செலுத்துவதில் சிரமம் அடைந்து வரும் நிலையில், இஎம்ஐ தொகை குறைய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2026 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை குறைக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக வீட்டு கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடன்களின் இஎம்ஐ தொகை குறையும் சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் ரிசர்வ் வங்கி நான்கு முறை ரெப்போ வட்டியை குறைத்திருந்தது. இதனால் கடன் பெற்றவர்களுக்கு ஓரளவு நிம்மதி கிடைத்தது. ஆனால் இதோடு நிற்காமல், வட்டி விகிதம் மேலும் குறையும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். IIFL கேப்பிட்டல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டில் மொத்தமாக 0.50 சதவீதம் (50 அடிப்படை புள்ளிகள்) வரை வட்டி விகிதம் குறையக்கூடும்.

வரும் பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ள நாணயக் கொள்கைக் கூட்டத்தில் முதல் கட்டமாக 0.25 சதவீத வட்டி குறைப்பு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் ஏப்ரல் அல்லது ஜூன் மாதங்களில் மேலும் 0.25 சதவீத வட்டி குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது. தற்போது பணவீக்கம் கட்டுப்பாட்டில் இருப்பதும், ரெப்போ வட்டி சற்று உயர்ந்த நிலையில் இருப்பதும் இதற்குக் காரணமாக கூறப்படுகிறது.

வட்டி விகிதம் குறைக்கப்பட்டால், வங்கிகள் வசூலிக்கும் இஎம்ஐ தொகையும் குறையும். உதாரணமாக, 30 லட்சம் ரூபாய் வீட்டு கடன் பெற்றவர்களுக்கு மாதந்தோறும் செலுத்தும் தொகையில் கணிசமான அளவு மிச்சம் கிடைக்கலாம். புதியதாக கடன் வாங்க திட்டமிடுபவர்களுக்கும் இது சாதகமான காலமாக அமையும்.

பொருளாதார வளர்ச்சி நிலையாக இருப்பதால், இந்த வட்டி குறைப்பு நடைமுறைக்கு வரும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. இதனால் 2026 ஆம் ஆண்டு கடன் வாங்கியவர்களுக்கு சாதகமான ஆண்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News