தற்போது 1 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையிலான நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. இந்நிலையில், 5 ரூபாய் நாணயம் புழக்கத்தில் இருந்து வாபஸ் பெறப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் பல்வேறு வகையான 5 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. பித்தளை மற்றும் தடிமனான உலோகத்தால் செய்யப்பட்ட நாணயங்கள் உள்ளன. தற்போது தடிமனான உலோகத்தால் செய்யப்பட்ட 5 ரூபாய் நாணயங்களும் உற்பத்தி செய்யப்படுவதில்லை.
பித்தளை 5 ரூபாய் நாணயங்கள் மட்டுமே புழக்கத்தில் இருக்கும். தடிமனான 5 ரூபாய் நாணயங்கள் கிடைக்காது. உங்களிடம் தடிமனான 5 ரூபாய் நாணயங்கள் இருந்தால், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அவற்றை வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.