Thursday, July 31, 2025

வங்கி லாக்கர் ரூல்ஸ் எல்லாம் மாறிடுச்சு.., RBI வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

வங்கிகளில் பணம் எடுப்பது, பணம் போடுவது மட்டுமல்லாமல் பல்வேறு வசதிகள் இருக்கின்றன. அதில் மிக முக்கியமான ஒன்றுதான் லாக்கர் வசதி. வங்கிகளில் உள்ள லாக்கர் மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. அதில் நம்முடைய மதிப்பு மிக்க பொருட்களை வாடகை அடிப்படையில் வைத்துக் கொள்ளலாம்.

இந்நிலையில் வங்கி லாக்கர் தொடர்பான புதிய விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி அமல்படுத்தியுள்ளது. அதாவது நீங்கள் வங்கி லாக்கரைப் பயன்படுத்துவதாக இருந்தால் நீங்கள் புதிய வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் லாக்கர் சீல் வைக்கப்படலாம்.

2023 ஜனவரி மாதத்துக்கு முன்பு லாக்கர் வசதியை எடுத்த வாடிக்கையாளர்கள் கையொப்பமிட வேண்டும். அதேபோல, கூட்டு லாக்கர் வைத்திருப்பவர்கள், நாமினி சேர்க்கப்பட்ட வாடிக்கையாளர்களும் இதில் அடங்குவர்.

நீங்கள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டீர்களா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்கள் வங்கிக் கிளையைப் பார்வையிட்ட அவர்களிடம் விசாரிக்கலாம். அங்கு சென்று தேவையான விவரங்களைப் பெறலாம். ஒருவேளை கையெழுத்து போடாமல் இருந்தால் உடனடியாக அதை முடிக்க வேண்டும்.

லாக்கர் ஒப்பந்தத்தை புதுப்பிக்கும்போது பான் கார்டு. ஆதார் கார்டு, பழைய லாக்கர்கள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஒப்பந்த பத்திரம் எல்லாம் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News