Thursday, December 26, 2024

குளிர்காலத்தில் தாக்கும் கொடிய நோய்! அலர்ட்டா இருங்க மக்களே

பருவகாலம் மாறும் போது சளி, இருமல் ஜலதோஷம் என தொடங்கி குறைந்த தட்பவெப்ப நிலை காரணமாக தீவிரமான நோய்கள் தாக்கும் வாய்ப்புகள் அதிகம்.

அப்படி குளிர்காலத்தில் வரக்கூடிய ஒரு நோயின் பெயர் தான் ரேனாட்ஸ் சின்ரம் (Raynauds Syndrome).

அதிகபட்ச குளிர் நிலவும் போது, நிலைமையை சமாளிக்க உடலில் உள்ள இரத்த குழாய்கள் சுருங்கி கொள்ளும். ஆனால், சில நேரங்களில் இரத்த குழாய்களில் ஏற்படும் அதிகப்படியான சுருக்கமே உடல் முழுவதையும் மரத்து போக செய்துவிடும்.

மன அழுத்தம் கொண்டவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை இந்நோய் எளிதில் தாக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளது. சாதாரணமாக குளிர் அதிகரிக்கையில் கை கால்கள் மரத்து போவது இயல்பு.

ஆனால், அடிக்கடி அப்படி நிகழ்ந்தாலோ அல்லது மரத்து போவதோடு சேர்த்து வலியை உணர்ந்தாலோ மருத்துவரை காண்பது அவசியம். இந்த நோய் பாதிப்பு மோசமடைந்து இரத்தம் உறையும் பட்சத்தில் தோல் நீலநிறமாகவும், இரத்த குழாய்கள் சேதமடைந்து விட்டால் உடல் முழுவதும் பாயும் இரத்தத்தினால் தோல் சிகப்பு நிறமாகவும் மாறக்கூடும்.

சிகப்பு நிறத்தில் தோல் மாறினால் உடலில் அதிக வலி ஏற்படும். இவ்வாறு பாதிக்கப்பட்ட நபர்கள் குளிர்ச்சியான எந்த பொருளையும் தொடக்கூடாது.

மிதமான அறிகுறிகள் கொண்ட பெரும்பாலானோர்க்கு கதகதப்பான சூழலில் சரியாகிவிடும் இந்த நோய் சில பேருக்கு சிறப்பான சிகிச்சை அளித்தால் மட்டுமே நிவாரணம் கிடைக்கும். இரத்த ஓட்டத்தை சீராக்கும் பயிற்சி மற்றும் calcium channel blockers, beta blockers போன்ற மருந்துகள் இந்த நோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Latest news