நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி இடையிலான சர்ச்சை நாளுக்குநாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது. ஆர்த்தி என்றுமே தன்னுடைய முன்னாள் மனைவி தான், மகன்களை கூட பார்க்க முடியவில்லை. கெனிஷா என் வாழ்வில் ஒளியாக வந்தவர் என்று ரவி மோகன் அண்மையில் 5 பக்கத்திற்கு அறிக்கை விட்டார்.
இதற்கு ஆர்த்தியின் அம்மாவும், தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார், ” 100 கோடி கடன் வாங்கி அதற்கு நான் வட்டி கட்டிக்கொண்டு இருக்கிறேன். என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபியுங்கள்,” என்று ரவி மோகனுக்கு சவால் விடுத்துள்ளார்.
இந்தநிலையில் ரவி மோகன் – ஆர்த்தி சர்ச்சை தொடர்பாக, இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருந்த பாடகி கெனிஷா முதன்முறையாக போஸ்ட் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ” இந்த சத்தங்களுக்கு இடையே அமைதியான நம்பிக்கை ஒன்று காத்திருக்கிறது.
எனது ஆன்மாவின் கஷ்டம் தனியாகத்தான் நிற்கிறது. அதேசமயம் அவையெல்லாம் மன உறுதியை கொடுக்கின்றன. மேலும் நான் இசையை பிடித்துக்கொண்டு நிற்கிறேன். காயங்களை பாடங்களாக ஏற்றுக்கொள்கிறேன். நாளைய விடியல் புதிய தொடக்கத்தை நோக்கி பயணிக்கிறது,” என்று தெரிவித்து இருக்கிறார்.
அவரின் இந்த பதிவு தற்போது ‘எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல’ அமைந்துள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள், ” என்ன இருந்தாலும் இது அவங்களோட பர்சனல். நாம கருத்து சொல்றதுக்கு ஒண்ணும் இல்ல,” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.