Wednesday, May 21, 2025

ரவி மோகன் & கெனிஷா திருமணம்? கடுப்பான ஆர்த்தி ரவியின் காரசாரமான பதிவு..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஜெயம் ரவி..இவர் தற்போது ரவி மோகன் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டு தங்களது ரசிகர்களை சந்தோசப்படுத்து வகையில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்… அண்மையில் ரவி மோகனும் அவரது மனைவி ஆர்த்தி ரவி விவாகரத்து பெறப்போவதாக கூறி தற்போது தனி தனியாக வாழ்ந்து வருகின்றனர்..

இந்த நிலையில் ரவி மோகனின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.. இதனைத் தொடர்ந்து ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமார் அறிக்கை வெளியிட்டு, ரவி மோகன் படத்துக்காக தான் 100 கோடிக்கு மேல் கடன் வாங்கி நஷ்டமடைந்ததாக கூறி இருந்தார். இப்படி இருதரப்புக்கும் இடையே குடுமிப்பிடி அறிக்கை சண்டை போட்டு வரும் நிலையில், தற்போது அந்த அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆர்த்தி ரவி மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளார்.

அந்த அறிக்கையில், “கண்ணியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களை விட நாடகம் போடுபவர்களுக்கே அதிகம் உள்ள இந்தக் காலத்தில் என்னைச் சுற்றி நடக்கும் சமீபத்திய சூழ்ச்சிகள் வேறு வழியின்றி என்னை மீண்டும் பேசும்படிச் செய்துவிட்டது. ஒரு முறை கடைசியாக அனைவருக்கும் உண்மையைச் சொல்ல வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். எங்களது திருமண வாழ்வு இந்த நிலைக்கு வந்ததற்குப் பணமோ, அதிகாரமோ, பிறர் தலையீடோ அல்லது கட்டுப்பாடோ காரணமல்ல.

எங்கள் வாழ்வில் வந்த ஒரு மூன்றாவது நபரே காரணம். எங்களைப் பிரித்தது எங்களுக்குள் இருந்த ஏதோ ஒன்று அல்ல. வெளியில் இருந்து வந்த ஒருவர் தான். “உங்கள் வாழ்வின் ஒளி” என அறியப்படும் அவர் எங்கள் வாழ்வில் இருளைக் கொண்டு வந்தார் என்பதே உண்மை. இந்த நபர், சட்டப்படி விவாகரத்து ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும் முன்பே எங்கள் வாழ்கையில் வந்துவிட்டார்.. என்ற இந்த கட்டமான விவாதத்தை குறிப்பிட்டுள்ளதோடு ஆர்த்தி ரவி அறிக்கை பல பக்கங்களுக்கு நிண்டு கொண்டே செல்கிறது..

இந்த நிலையில் நடிகர் ரவி மோகனின் காதலி கெனிஷா தற்போது இன்ஸ்டாகிராமில் சூசக பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘புதிய தொடக்கத்தை நோக்கி’ என புரியாத புதிர் ஒன்றை பதிவிட்டுள்ளார் கெனிஷா..

அதில், “இந்த சத்தங்களுக்கு நடுவே அமைதியான நம்பிக்கை ஒன்று காத்திருக்கின்றது. என் ஆன்மாவின் கஷ்டம் தனியாக நிற்கின்றது. அதே வேளையில் அவையெல்லாம் மன உறுதியை கொடுக்கிறது. தற்போதுள்ள சூழலில் நான் இசையை கெட்டியாக பிடித்துக்கொண்டிருக்கிறேன். காயங்களை எல்லாம் பாடங்களாக ஏற்றுக் கொள்கிறேன். நாளைய விடியல் புதிய தொடக்கத்தை நோக்கி பயணிக்கின்றது”, என குறிப்பிட்டிருப்பது பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் கிளப்பிவிட்டுள்ளது..

Latest news