நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி இணை விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அதிகாரப்பூர்வமாக இன்னும் விவாகரத்து வழங்கப்படாத நிலையில் ரவி மோகன் பாடகி கேனிஷாவுடன் பொது நிகழ்வுகளில் கலந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக நடிகர் ரவி மோகன் 4 பக்கம் கொண்ட அறிக்கையை வெளியிட்டார். அதில், “ என் முன்னாள் மனைவியும் அவரின் குடும்பத்தாரும் என்னைக் கொடுமைப்படுத்தியுள்ளதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகர் ரவி மோகன், ஆர்த்தி இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகினர். இதில், ரவி மோகன் ஆர்த்தியுடன் வாழ விருப்பமில்லை என விவகாரத்துக் கோரியும், மாதம் ரூ. 40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தியும் புதிதாக மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். மனுவைப் பெற்ற நீதிபதி வழக்கு விசாரணையை ஜூன் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.