பீகார் மாநிலம், பாட்னாவில் உள்ள நாளந்தா அரசு மருத்துவமனையில் அவதேஷ் குமார் என்பவர், எலும்பியல் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இவரது வலதுகாலை எலிகள் கடித்ததால், தூக்கத்தில் இருந்த அவதேஷ் குமார் அதிர்ச்சி அடைந்தார்.
இதனை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், X தளத்தில் பதிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு இதே மருத்துவமனையில் இறந்த நோயாளியின் கண்ணை எலிகள் தின்றதாக புகார் எழுந்தது, தற்போது நோயாளியின் விரல்களை எலிகள் கடித்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
தாங்கள் கட்டமைத்து வைத்த சுகாதாரத்துறையை 17 மாத ஆட்சியில் ஐக்கிய ஜனதா தளம் சீரழித்துவிட்டது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.