புதுச்சேரியில் ரேஷன் கடை இல்லாத பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில், நெல்லித்தோப்பு சட்டப்பேரவை உறுப்பினர் ரிச்சர்ட், மாநில அரசு கொடுக்கும் இலவச அரிசியை பெரும்பாலான மக்கள் வாங்கவில்லை என கூறினார். இதற்கு பதில் அளித்த அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரியில் ரேஷன் கடை இல்லாத பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று அரிசி மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
புதுச்சேரியில் பல ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்த ரேஷன் கடைகளை திறந்துள்ளோம் எனவும் கூறினார். ரேஷன் கடை ஊழியர்களுக்கு விரைவில் சம்பளம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.