மலேசியாவில் இருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட அரியவகை உயிரினங்கள் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து, திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பயணியின் உடைமையில் அரிய வகை உயிரினங்கள் இருப்பது தெரியவந்தது.
அவரது பெட்டியில் இருந்து 32 சிகப்பு காது கொண்ட ஆமைகள், 13 பச்சை உடும்புகள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அரியவகை உயிரினங்கள் கடத்தி வந்த நபரிடம், விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
