நகங்கள் இல்லாத விறல்! அதிரவைக்கும் புகைப்படம்..இதயமே நடுங்குதே..

229
Advertisement

அண்மையில் இணையத்தில் வெளியான புகைப்படம் ஒன்று வைரலாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய செய்துவருகிறது.

பெரும்பாலும் அழகுக்காகவே பார்க்கப்படும் நகங்கள்விரலுக்கு ஒரு கவசம் போன்றது.நமக்கு டென்ஷன் என்றாலே பலிகடாவாவது பாவம் அந்த அப்பாவி நகம் தான். நகங்கள் சிதைந்தும், உடைந்தும், உருமாறியும் இருந்தால்கூட பரவாயில்லை..

நகமே சுத்தமாக இல்லை என்றால் நினைத்து பாருங்கள் இதற்கு காரணம், இது ஒரு அரியவகை பாதிப்பு என்று கூறப்படுகிறது. இந்த பாதிப்பு பெயர் அனோனிச்சியா காங்கினிடா(Anonychia conginita)என்கிறார்கள் மருத்துவர்கள்.

அதாவது, ஆணி தட்டுகள் இல்லாதது என்று இதற்கு தமிழில் பெயர்.. லிச்சென் பிளானஸ்(Lichen planus), பெம்பிகஸ்(Pemphigus), பிறவி எபிடெர்மோலிசிஸ் புல்லோசா(Congenital epidermolysis bullosa) ஆகியவை அனோனிசியா குறிப்பிடப்பட்ட நோய்களாகும்.

இந்த நோய் இயற்கையில் பூஞ்சை கிடையாது.ஒருவருடைய தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு அல்லது ஒரு தலைமுறை வழியாக அனுப்பப்படும் ஒரு மரபணு அசாதாரணம் காரணமாக நிகழக்கூடியது இந்த நோய் இது பிறவி குறைபாடு என்பதால், சிகிச்சை அளித்தாலும் எந்த பயனும் கிட்டாது என்பதுதான் நிதர்சமான உண்மை என்று மருத்துவர்கள் கருத்துதெரிவிக்கின்றனர் இதை சரிசெய்ய ஒரே வழி, அந்த குறைபாட்டை மறைப்பதுதான்.

அதாவது, இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிறக்கும்போதே கால்விரல்கள் மற்றும் கைவிரல்களில் நகங்கள் இருக்காதாம் அதன் பிறகும் நகம் கொஞ்சம்கூட வளராமல் தடுக்கப்பட்டுவிடுகிறதுஇந்த பாதிப்புக்கு சிகிச்சை எதுவும் இல்லை, ஆனால் செயற்கை நகங்களை பொருத்திக் கொள்ளலாம் என்று அமெரிக்காவில் உள்ள தேசிய பயோடெக்னாலஜி தகவல் மையம் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

இணையத்தில் வெளியான இந்த புகைப்படம் காண்போரை கவலை மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.