Monday, February 10, 2025

ஆகாயத்தில் அபூர்வ சாதனை புரிந்த அர்மேனிய இளைஞர்

பறக்கும் ஹெலிகாப்டரில் புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளார் இளைஞர் ஒருவர்.

கின்னஸ் சாதனை புரிவதற்காகப் பலரும் பல்வேறு விதங்களில் முயற்சிசெய்து வருகின்றனர். தங்களின் முயற்சியில் வெற்றிபெற்று உலகின் கவனத்தையும் ஈர்த்துவருகின்றனர்.

சமீபத்தில் அர்மேனியா நாட்டைச் சேர்ந்த ரோமன் சஹ்ராடியன் என்னும் இளைஞர், உடற்பயிற்சிகளுள் ஒன்றான புல் அப்ஸை கின்னஸ் சாதனைக்காகத் தேர்ந்தெடுத்துள்ளார். பறக்கும் ஹெலிகாப்டரில் தொங்கியபடி, ஒரு நிமிடத்தில் 23 புல் அப்ஸ் எடுத்து அனைவரையும் வியக்கவைத்துள்ளார்.

ரோமனின் இந்தப் பயிற்சி உலக சாதனையாகியுள்ளது. இதற்குமுன் வெவ்வேறு சாதனை புரிந்துள்ள ரோமன் தற்போது விண்ணில் பறந்தபடி புல் அப்ஸ் செய்து வித்தியாசமான சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.

உடல் வலிமையும் மன வலிமையும் ரோமனை சாதனையாளர் ஆக்கியுள்ளன.
நீங்களும் இப்படி ஏதாவது புதுசா முயற்சி செய்யுங்களேன்…..

Latest news