S.P.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “மனிதன்” திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரூபிணி நடித்துள்ளார்.மேலும், சோ, வினு சக்கரவர்த்தி, ரகுவரன், செந்தில், ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ் என பலர் நடித்திருந்தனர்.
இந்த படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் ஆனது. இந்த நிலையில், ரஜினிகாந்த் திரைத்துறையில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை கொண்டாடும் வகையில் மனிதன் திரைப்படத்தை டிஜிட்டல் முறையில் மாற்றி ரீ ரிலீஸ் செய்யவுள்ளனர்.
இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 10ம் தேதி ரிலீஸ் ஆவதால் ரஜினிகாந்தின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
