கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படம் மே 1ம் தேதி வெளியானது. இப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.
இந்நிலையில் ‘ரெட்ரோ’ படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.”படக்குழுவின் ஒட்டுமொத்தமான கடின உழைப்பு தெரிகிறது. சூர்யாவின் நடிப்பு சூப்பர். படத்தின் கடைசி 40 நிமிடங்கள் அருமையாக இருந்தது. காட் ப்ளெஸ்”என கூறியுள்ளதாக கார்த்திக் சுப்பராஜ் அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.