கட்சியில் இணையுமாறு ரஜினி கேட்டார் நான் மறுத்துவிட்டேன் – அண்ணாமலை பரபரப்பு

கடந்த 2020-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் தொடங்கவிருந்த கட்சியில் இணைய தன்னை அவர், அழைத்ததாக அண்ணாமலை நேரலையில் தெரிவித்துள்ளார். ஆனால் ரஜினியின் அழைப்பை ஏற்க மறுத்து பாஜகவில் இணைவதாக அவரிடம் தெரிவித்ததாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அண்ணாமலை கூறும்போது , பாஜகவில் ஆகஸ்ட் 2020 டெல்லியில் இணைந்தேன். தமிழகத்தில் தமிழக மக்களுக்காக 6 ஆண்டுகாலம் பணியாற்றினேன். இதை பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.ந்த இடத்தில் இணைந்தோனோ அதே இடத்தில் இருந்து மரியாதையோடு பண்போடு அன்போடு எனது பாதை வேறு , இலக்குகள் பெரியதாக இருக்கிறது, நிறைய மக்களை இணைத்து செயல்பட வேண்டும், ஒரு புதிய அரசியலை அடிப்படை கட்டமைப்பை மாற்றக் கூடிய அரசியலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பண்போடு பாஜக தலைமையிடம் சொல்லிவிட்டு அந்த இயக்கத்தில் இருந்து வெளியே வந்துவிட்டேன் என பேசினார்

25 வயதில் விஜயகாந்திடம் அரசியல் பயின்றேன். புதிய அரசியலை தமிழகத்தில் கொண்டு வர முடியுமா என்ற யோசித்த தருணம் அது! இன்று எனக்கு வயது 42! கிட்டதட்ட 17 ஆண்டுகளாக புதிய பாதையை உருவாக்க முடியுமா என போராடி வருகிறேன்.அதே வேளையில் டெல்லியில் ஆகஸ்ட் மாதம் 2020 இல் பாஜகவில் இணைவதற்கு ஒரு நாள் முன்பு, ரஜினிகாந்த் எனக்கு போன் செய்து,அவர் தொடங்கவிருக்கும் இயக்கத்தில் நான் இணைய வேண்டும் என கேட்டார்.

கொரோனா காலகட்டத்தில் அவருக்கு இருந்த உடல் பிரச்சினைகளை பார்த்து அவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என விரும்பினேன். பாஜகவில் இணைகிறேன் என்ற வாக்குறுதியை , பி.எல். சந்தோஷிடம் கொடுத்திருந்தேன். அதை மீற கூடாது என்பதில் நான் தெளிவாக இருந்தேன். அப்போது நான் ரஜினியிடம் என் நிலையை கூறி வர முடியாததற்கு மன்னித்துவிடுங்கள் என்றேன் என கூறியுள்ளார்

Related News

Latest News