விருதுநகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார்.
இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் அவருக்கு பொன்னாடை அணிவிக்க மேடைக்கு வந்தனர். வரிசையில் வராமல் முண்டியடித்துக் கொண்டு வந்ததால் ஆத்திரமடைந்த ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் நந்தகுமாரை ‘பளார்’ என கன்னத்தில் அறைந்தார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.