ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று IIFA திரைப்பட விருது விழா நடைபெற்றது. இதில் அம்மாநில முதல்வர் பஜன்லால் சர்மா கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் செய்தியாளர் ஒருவர் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த அவர் பிரதமர் மோடியின் பெயரை கூறியுள்ளார். இதைப் கேட்டு எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தார்கள். இந்த வீடியோ இணையத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது.