தெலுங்கு திரையுலகின் பிரமாண்ட இயக்குனராக இருப்பவர் இயக்குனர் ராஜமௌலி. இவரது இயக்கத்தில் வெளியான பாகுபலி, பாகுபலி 2, RRR ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
தற்போது ராஜமௌலி தெலுங்கின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவை வைத்து புதிய படத்தை இயக்கு வருகிறார். இப்படத்திற்கு பெயர் வைக்கப்டாததால் SSMB29 என அழைக்கப்படுகிறது. இப்படத்தில் பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் சுகுமார் மற்றும் பல முன்னணி நகடிர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படம் சுமார் 1200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது இரண்டு பாகமாக எடுக்கப்பட இருக்கிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் நவம்பர் மாதம் வெளியாகும் என ராஜமௌலி தெரிவித்தார்.