திருவள்ளுர் மாவட்டம், பூந்தமல்லி – பட்டாபிராம் தடத்தில் இயங்கும் தடம் எண் 54 சி பேருந்தை நம்பி பள்ளி கல்லூரி வேலைக்கு செல்வோர் நாள்தோறும் பயணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை முதல் சென்னை மற்றும் புறநகரில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் பயணிகள் இருக்கைக்கு மேல் உள்ள மேற்கூரையில் மழை நீர் ஒழுகியது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
பேருந்தில் பயணித்த பயணி ஒருவர், குடை பிடித்தபடி அமர்ந்து பயணித்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
