Friday, September 26, 2025

17 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!! எந்தெந்த இடம் தெரியுமா ?

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் இரவு 7 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கன்னியாகுமரி, தேனி, கோயம்புத்தூர் , நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல், திருப்பூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News