தமிழகத்தில் இன்று முதல் ஜனவரி 2ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளா, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் இன்று (டிச.,27) முதல் வரும் ஜனவரி 2ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.