சென்னையின் பல்வேறு பகுதிகளில், நள்ளிரவில் பரவலாக கனமழை பெய்தது. இந்நிலையில், இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், அடுத்த ஒரு வாரத்திற்கு மழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலை, இரவு அல்லது நள்ளிரவில் இடி, மின்னலுடன் கூடிய வெப்பச்சலன மழை தீவிரம் அடைந்து மழைப்பொழிவை கொடுக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.