சென்னை உள்பட தமிழகத்தின் 19 மாவட்டத்துக்கு அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை உள்ளிட்ட 15 மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.