விமான நிலையங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகளை போலவே, ரயில் பயணிகளின் லக்கேஜ் எடை மற்றும் அளவை கட்டுப்படுத்த இந்திய ரயில்வே ஒழுங்குமுறை திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த புதிய விதிகளின்படி, முக்கிய ரயில் நிலையங்களில், பயணிகள் தங்கள் உடமைகளை மின்னணு எடை இயந்திரங்கள் மூலம் பரிசோதனை செய்ய வேண்டும். ஒவ்வொரு வகுப்புக்கும் நிர்ணயிக்கப்பட்ட எடை வரம்பை மீறும் உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம் அல்லது அபராதம் விதிக்கப்படும்.
அனுமதிக்கப்பட்ட எடை வரம்பு
ஏசி முதல் வகுப்பு: 70 கிலோ வரை
ஏசி இரண்டாம் வகுப்பு: 50 கிலோ வரை
ஏசி மூன்றாம் வகுப்பு மற்றும் படுக்கை வசதி வகுப்பு: 40 கிலோ வரை
பொது வகுப்பு: 35 கிலோ வரை
இந்த புதிய நடைமுறை, முதற்கட்டமாக வட மத்திய ரயில்வே மண்டலத்தின் கீழ் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.