இந்திய ரயில்வே 2025 மே 1-ஆம் தேதியிலிருந்து சில முக்கிய மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. இவை குறிப்பாக வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகளை பாதிக்கும் விதமாக அமையப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய விதிப்படி, ஒரு பயணி டிக்கெட் உறுதியாகாத நிலையிலும், ஸ்லீப்பர் அல்லது ஏசி கோச்களில் ஏறி பயணம் செய்து வந்திருக்கலாம். ஆனால் இனி அது முடியாது. இப்போது உங்கள் டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட்-ல இருந்தால், அதனுடன் நீங்கள் ஏசி அல்லது ஸ்லீப்பர் கோச்களில் பயணம் செய்ய முடியாது. இதன் பொருள், உங்களது பயண அனுமதி, பொதுப் பெட்டிகளுக்கு மட்டுமே.
விதிகளை மீறி ஏசி கோச்களில் ஏறினால் ரூ. 440 வரை அபராதம், ஸ்லீப்பரில் ஏறினால் ரூ. 250 அபராதம் விதிக்கப்படும். கூடுதலாக, நீங்கள் ஏறிய இடத்திலிருந்து அடுத்த ரயில் நிலையம் வரை பயண கட்டணமும் வசூலிக்கப்படும்.
இந்த விதிகளை கடுமையாக பின்பற்றுமாறு டிக்கெட் செக்கர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் இனிமேல் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் வைத்திருந்தால், எந்த ஒரு கோச்-க்கும் ஏற முடியாமல், நீங்கள் இழக்கப்போவது நேரம், பணம் இரண்டும்.
இது மட்டும் இல்லாமல், மற்றொரு பெரிய மாற்றம் என்னவென்றால், முன்பதிவுக்கான காலம். முந்தையதுபோல 120 நாட்கள் முன்பே டிக்கெட் புக் செய்ய முடியாது. இப்போது அந்த காலம் 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இத்தனை மாற்றங்களும், கன்ஃபார்ம்டு டிக்கெட்டுடன் பயணிக்கும் பயணிகளுக்கு நிம்மதியான, பாதுகாப்பான அனுபவம் வழங்கவே என்று இந்திய ரயில்வே எடுத்த ஒரு முக்கியமான முடிவாகும்.
அதனால், இனிமேல் ஏசி, ஸ்லீப்பர் கோச்-ல் பயணிக்க விரும்பும் அனைவரும் தங்களுடைய டிக்கெட் உறுதிப்படுத்தப்பட்டதா என்பதை ஒரு முறை அல்ல, இரு முறை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில், ஒருபக்கம் அபராதம், மறுபக்கம் பயண இடையூறு. பொதுப் பெட்டியில் மட்டும் பயணிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு செயல்படத் தொடங்கிவிட்டது.