பீகார் மாநிலம் தர்பங்கா பகுதியில் அம்பேத்கர் விடுதி மாணவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று கலந்துரையாடவிருந்தார். இதற்காக மாணவர்களைச் சந்திக்கச் சென்றபோது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் காவல்துறைக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையின் தடையை மீறி ராகுல் காந்தி நடந்தே சென்று மாணவர்களைச் சந்தித்துப் பேசி வருகிறார்.
“தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களைச் சந்திக்க பிகார் அரசு என்னைத் தடுக்கிறது. பிகார் முதல்வர் நிதீஷ் குமார் ஜி, ஏன் பயப்படுகிறீர்கள்? மாநிலத்தின் கல்வியையும் சமூக நீதியையும் மறைக்கப் பார்க்கிறீர்களா?” என்று ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.