Thursday, August 14, 2025
HTML tutorial

மோடி அரசின் 11 ஆண்டுகள், வெறும் விளம்பரமே : ராகுல் காந்தி விமர்சனம்

மோடி அரசின் 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை (ஜூன் 9, 2025) இந்த அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தனது 11 ஆண்டுகால ஆட்சியை கொண்டாடும் நிலையில், ராகுல் காந்தி மும்பை புறநகர் ரயில் விபத்தை குறிப்பிட்டு மோடி அரசை விமர்சனம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது: “மோடி அரசு தனது 11 ஆண்டுகால “சேவையை” கொண்டாடும் வேளையில், மும்பையிலிருந்து வரும் துயரச் செய்தி நாட்டின் யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது. பலர் ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்து இறந்துள்ளனர். நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் முதுகெலும்பாக இருக்கும் இந்திய ரயில்வே, இன்று பாதுகாப்பின்மை, நெரிசல் மற்றும் குழப்பத்தின் அடையாளமாக மாறியுள்ளது.

மோடி அரசின் 11 ஆண்டுகள் = பொறுப்பின்மை + மாற்றமில்லை + வெறும் விளம்பரமே. 2025 பற்றி பேசுவதை அரசு நிறுத்திவிட்டு, 2024-க்கான கனவுகளை விற்று வருகின்றது. மும்பை ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News