Thursday, December 26, 2024

மளிகை கடை வியாபாரிகளை சந்தித்த ராகுல்காந்தி…என்ன காரணம்?

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் உள்ள மளிகை கடை வியாபாரிகளை சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார்.

இது தொடர்பான விடியோவை ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் “சமீபத்தில் டெல்லியில் உள்ள ஒரு மளிகை கடைக்கு சென்றேன். வர்த்தக வணிகத்தின் விரைவான வளர்ச்சியின் காரணமாக, ஆயிரக்கணக்கான மளிகைக் கடைகள் தற்போது மூடப்படுகின்றன. இது கவலையளிக்கிறது.

தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை நாம் ஊக்குவிக்கும் அதே சமயம் அதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு பாதுகாப்பையும் வழங்க வேண்டும்.

நமது பொருளாதாரம் மாற்றமடைந்து, உலகப் போக்குகளுக்கு ஏற்ப நாம் முன்னேறும்போது, சிறு வணிகர்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்” என்று பதிவிட்டுள்ளார்.

Latest news