கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் மோசடி நடந்துள்ளது என குற்றம் சாட்டியுள்ள ராகுல் காந்தி, அதற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஒரு மக்களவைத் தொகுதியின் வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்தபோது, மொத்தமுள்ள 6.5 லட்சம் வாக்காளர்களில் 1.5 லட்சம் வாக்காளர்கள் போலியானவர்கள் என்பதை நாங்கள் கண்டறிந்தோம். இந்த மோசடியால்தான் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அவர்கள் 15-20 தொகுதிகள் குறைவாகப் பெற்றிருந்தால், அவர் (பிரதமர் நரேந்திர மோடி) பிரதமராகி இருக்க மாட்டார்.
மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தலுக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இடையே 1 கோடி புதிய வாக்காளர்கள் வந்திருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். அந்த வாக்குகளில் பெரும்பகுதி பாஜகவுக்குச் சென்றுள்ளது. இதற்கான ஆதாரம் இப்போது எங்களிடம் உள்ளது. சந்தேகத்துக்கு இடமின்றி இதைக் கூறுகிறேன்” என தெரிவித்தார்.