வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி. நடத்தினர். பாராளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் வரை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணியாக சென்றனர். 25 கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான எம்.பி.க்களை காவல்துறை தடுத்து நிறுத்தியது. இதில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கனிமொழி, ஜோதிமணி உள்ளிட்ட இந்தியா கூட்டணியை சேர்ந்த 300 எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட சிலருக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டது. அங்குப் புழுக்கம் அதிகமாக இருந்த நிலையில் பெண் எம்பிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. குறிப்பாகத் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மிதாலி பாக், போராட்டக் களத்திலேயே மயங்கினார். இதை கவனித்த ராகுல் காந்தி மயங்கி விழுந்த மிதாலி பாக்கை பத்திரமாக அழைத்துச் சென்ற ராகுல் காந்தி, காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.